இமாச்சலப்பிரதேசத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசத்தில் கடும் மழை காரணமாக ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பிரதேயக வீடியோ காட்சிகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.