Aug 5, 2022, 10:34 AM IST
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட லேசர் வழிகாட்டுதலுடன் கூடிய ஏவுகணை தாங்கி பீரங்கி(ATGM) இந்திய ராணுவத்தால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறிப்பிட்ட எல்லைகளில் நிலைநிறுத்தப்பட்ட இலக்குகளை ஏவுகணைகள் துல்லியமாக தாக்கின. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவத்தை பாராட்டியுள்ளார்.