Sep 30, 2022, 8:02 PM IST
புதுச்சேரியில் மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையில் மதசார்பற்ற அரசியல் கட்சிகளின் சாலை மறியல் போராட்டம் இன்று நடத்தப்பட்டது.
அண்ணா சிலை அருகே நடைபெற்று வரும் சாலை மறியல் போராட்டத்திற்கு திமுக எதிர்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, வணிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து மத்திய மாநில அரசியலை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
லாபத்தில் இயங்கும் மின் துறையை தனியாருக்கு தாரை வார்த்து விட்டதாக மதச்சார்பற்ற கட்சிகள் குற்றச்சாட்டு
இவர்களுக்கு ஆதரவாக 300-க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.