கர்நாடக அட்டகல் கிராமத்தில் உள்ள மசூதிக்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ்குமார் திடீரென கதறி அழுதார்.
கர்நாடக தேர்தல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது. அனைத்துக்கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோலார் மாவட்டம் சீனிவாசபுரா தாலுக்காவின் அட்டகல் கிராமத்தின் மசூதிக்கு சென்ற முன்னாள் சபாநாயகரும், சீனிவாசபுர காங்கிரஸ் வேட்பாளருமான ரமேஷ்குமார் கதறி அழுதார். அவர் அழுதபடியே அங்குள்ள இஸ்லாமிய மக்களுடன் உரையாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது