
பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையம் அருகே குண்டு வெடித்ததைத் தொடர்ந்து லாகூர் உட்பட முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் விளைவாக பாகிஸ்தானில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை லாகூர் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்ததாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக லாகூர் உட்பட நாட்டில் உள்ள எல்லையோர விமானங்கள் மூடப்பட்டுள்ளன.
பயணிகள் விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லையில் உள்ள விமான நிலையங்களை ராணுவ விமானங்களின் தேவைக்கு பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடும் என்பதால் இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.