Sep 25, 2022, 3:35 PM IST
ஆதிசங்கரரின் சிலை தயாரிப்பதற்கான பணியை மேற்கொள்வதற்கு நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு போட்டியாளர்களுக்கு இடையே தேர்ந்தெடுக்கப்பட்டவர் அருண் யோகிராஜ். அவருடன் ஏசியாநெட் நியூஸ் நடத்திய சிறப்பு நேர்காணல் உங்களுக்காக.
ஆதி குரு சங்கராச்சாரியாரின் 12 அடி பெரிய கல் சிற்பம் மைசூருவின் சரஸ்வதிபுரத்தில் உள்ள சிற்பி அருண் யோகிராஜின் பட்டறையில் இருந்து கேதார்நாத்தில் உள்ள சமாதி ஸ்தலத்திற்கு இந்திய விமான படை மூலம் கேதர்நாத்திற்க்கு சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆதிசங்கரரின் சிலை தயாரிப்பதற்கான பணியை மேற்கொள்வதற்கு நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு போட்டியாளர்களுக்கு இடையே தேர்ந்தெடுக்கப்பட்டவர் அருண் யோகிராஜ். சிலை செய்வதற்கான முயற்சியில் பிரதமரே தலையிட்டு அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தது அருணுக்கு கூடுதல் சவாலாக இருந்தது. இதுகுறித்து அருண் கூறுகையில், "இது ஒரு பெரிய பொறுப்பாக இருந்தது. ஏனென்றால் இந்த சிலை தயாரிப்பதற்கான முயற்சியில் பிரதமரே நேரடியாக தலையிட்டு சிலை தயாரிப்பதற்கான அனைத்து அம்சங்களையும் தெரிவித்ததுடன் சிலை தயாரிப்பு பணிகளை அவ்வப்போது கேட்டறிந்தார்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தலைநகர் டெல்லியில் இந்தியா கேட்டை அலங்கரிக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலையை செதுக்கிய சிற்பியும் இவரே!