Jul 13, 2024, 9:22 PM IST
நேற்று ஜூலை 12ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில், முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இதில் பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் என அனைத்து திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களும் நேரில் வந்து கலந்து கொண்டனர்.
மேலும் வெளிநாடுகளில் இருந்தும் பல பிரபலங்கள் நேரில் வந்து திருமண நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிலையில் திருமணத்தின் இரண்டாம் நாளான இன்று "ஆசிர்வாத்" நிகழ்ச்சி, இன்று ஜூலை மாதம் 13ம் தேதி மும்பையில் கொண்டாடப்பட்டது.
இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி சென்றனர். இந்த நிகழ்வின்போது தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவியும் உடனிருந்தனர்.