Jul 8, 2022, 7:37 PM IST
அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை அண்மையில் தொடங்கியது. ஆனால், தொடரும் கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் கீழ் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று மாலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆற்றில் திடீல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் பக்தர்கள் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
amarnath yatra begins: அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது: 2,750 பக்தர்கள் குகைக் கோயிலுக்கு புறப்பட்டனர்