ஏரோ இந்தியா 2023-இல் விமான ஆயுதப்படை வீரர்களுக்கான உடை ஜெட் சூட் MK-1 ஐக் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது, Absolute Composites -இன் நிர்வாக இயக்குநர் ராகவ் ரெட்டியிடம் எங்களது குழுவின் Asianet Newsable செய்தி ஆசிரியர் விபின் விஜயன் அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து உரையாடினார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் இந்திய ஆயுதப்படை வீரர்களுக்கு அவசரகால கொள்முதல் அடிப்படையில் 48 ஜெட் பேக் சூட்களை வாங்குவதற்கான முன்மொழிவுக்கான கோரிக்கையை வெளியிட்டது. ஜெட் பேக் சூட்டில் நவீன அமைப்புகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட புதிய ஆடை நடைபெற்று வரும் ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியின் போது ஏசியாநெட் நியூசபிள் நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் விபின் விஜயன், ஜெட் சூட் எம்கே-1 பற்றிய கூடுதல் தகவல்களை அப்சலூட் காம்போசிட்ஸின் நிர்வாக இயக்குநர் ராகவ் ரெட்டியுடன் நேரில் உரையாடினார். முழு பேட்டியை இங்கே காணுங்கள்.