Sep 2, 2023, 12:19 PM IST
சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. சூரியனுக்கு அனுப்பப்படும் ஆதித்யா எந்த ஒரு கிரகத்தையும் சுற்றி அனுப்பப்படவில்லை. பூமி என்ற ஒரு கிரகம் சூரியன் என்ற ஒரு நட்சத்திரம், இரண்டும் சேரும் இடத்தில் ஒரு பொசிஷன் உள்ளது. அந்த இடத்தில், பேலன்ஸ் ஆக இருக்கும். அதில் மிக முக்கியமான ஒரு இடம் எல் ஒன் ( L1). பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
தற்போது ஆதித்யா l1 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.