சத்தீஸ்கரில் மைனர் பெண்ணின் தலைமுடியை பிடித்து நடுரோட்டில் தரதரவென இழுத்துச்சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் மளிகைக் கடை ஒன்றில் மைனர் பெண் வேலைபார்த்து வந்ததார். பணியைவிட்டு நின்ற அந்த பெண் தான் வேலைபார்த்த நாளுக்கான் சம்பளத்தை கேட்டதாக கூறப்படுகிறது. இந்த மளிகைக்கடையின் நடத்துனர் ஓம்கார் திவாரி, அப்பெண்ணை நடுசாலையில் தலைமுடியை பிடித்தவாறு தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.