விஜயவாடாவில் பயங்கரம்; பிரேக் பிடிக்காத பேருந்து பிளாட்பாரத்தின் மீது ஏறியதில் மூவர் பலி!!

விஜயவாடாவில் பயங்கரம்; பிரேக் பிடிக்காத பேருந்து பிளாட்பாரத்தின் மீது ஏறியதில் மூவர் பலி!!

Published : Nov 06, 2023, 12:44 PM ISTUpdated : Nov 06, 2023, 12:48 PM IST

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பிரேக் திடீரென செயலிழந்து அங்கு நின்றவர்கள் மீது மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா பேருந்து நிலையத்திலிருந்து குண்டூர் செல்வதற்காக பயணிகளுடன் அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று காத்திருந்தது. விஜயவாடா பேருந்து நிலையத்தில் டிரைவர் பேருந்தை ஸ்டார்ட் செய்தபோது பிரேக் பிடிக்கவில்லை. இதனால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னோக்கி சென்று பிளாட்பாரம் மீது ஏறியது. அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள், நடத்துனர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. 

விபத்தில் அதே பேருந்தின் நடத்துனர், ஒரு குழந்தை, ஒரு பெண் என மூவர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விபத்தில் உயிரிழந்த மூவரின் உடல்களும் விஜயவாடா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!