அதிருதா மாமே... டி.ஆரின் தெறிக்கும் குரலில் வெளிவந்த மார்க் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

Jul 13, 2023, 2:42 PM IST

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், ரித்து வர்மா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. மார்க் ஆண்டனி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். 

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மார்க் ஆண்டனி திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. தற்போது இப்படத்தின் பின்னணி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி மார்க் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக அதிருதா என்கிற பாடலை வெளியிட உள்ளனர். இந்தப் பாடலை நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் பாடி இருக்கிறார். இப்பாடல் பதிவின் போது எடுத்த வீடியோ உடன் இப்பாடலுக்கான புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜூலை 15-ந் தேதி மாலை 6 மணிக்கு இப்பாடல் ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.