பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி முதல் துவங்க உள்ள நிலையில், இதில் விஜய் சேதுபதியின் ரீல் மகள் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில், இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம், 'மகாராஜா'. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தவர் சச்சனா நமிதாஸ்.
24 வயதிலும், 18 வயது பெண் போல் இருக்கும் இவர்.. தற்போது ஹீரோயின் வாய்ப்புக்காக விஜய் டிவியில் ஆரம்பமாக உள்ள, பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் சிபாரிசு காரணமாகவே சச்சனாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.