Nov 3, 2022, 7:08 PM IST
இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'வாரிசு' திரைப்படம்... பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா - விஜய் இடம்பெற்றுள்ள ரொமான்டிக் பாடலான 'ரஞ்சிதமே' பாடல் நவம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு, அறிவித்திருந்த நிலையில்... சற்று முன்னர், இந்த பாடலின் புரோமோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. விஜய்யின் மெர்சலான மூமென்ட்டோடு சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.
தமன் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிகள் வரிகளை எழுதியுள்ளார். தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.