டிராகன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய விக்னேஷ் சிவன், தான் தன்னுடைய சினிமா கேரியரில் மோசமான தருணத்தில் இருந்ததாகவும் அப்போது பிரதீப்பை சந்தித்து ஒரு கதையை சொன்னதாகவும் கூறியுள்ளார். அவர் உடனடியாக ஓகே சொன்னதாகவும் அப்படித்தான் LIK படம் சாத்தியமானதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பிரதீப்பிற்கு தான் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.