Oct 10, 2022, 6:27 PM IST
குளு குளு படத்தை அடுத்து தற்போது சந்தானம் நடிப்பில் கிக் படம் உருவாகி வருகிறது. கன்னடத்தில் வெளியான ஜும் படத்தின் ரீமேக்காக படம் உருவாகியுள்ளது. இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கி வருகிறார். இதில் இரு நாயகிகள் நடிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் செந்தில் , கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். இந்த படத்திலிருந்து சேட்டர்டே என்னும் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சந்தானம் பாடியுள்ளார். இவர் திரையில் பாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.