Watch: உன் உயிர் போறத பார்த்து ரசிக்கிறது தான் என் நோக்கம்! விறுவிறுப்பான போர் தொழில் பட ட்ரைலர் வெளியானது!

May 30, 2023, 6:51 PM IST

இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சைக்கோ திரில்லர் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் 'போர் தொழில்'. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர்.

பெண்களை குறி வைத்து, ஒரே மாதிரி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை பற்றிய, சைக்கோ திரில்லர் திரைப்படம் இது என்பது ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. காவல் துறையையே அதிர வைக்கும், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை நிகிலா விமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜூன் ஒன்பதாம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை, அப்லாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.  மேலும் இந்த படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய், என்பவர் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கியுள்ள இந்த படத்தில் டிரைலர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.