Oct 22, 2022, 12:41 PM IST
பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த பாகுபலி ராஜமவுளியின் அடுத்த படைப்பாக வெளியாகியிருந்தது ஆர் ஆர் ஆர் படம் வெளியாகி இருந்தது. கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளியான இந்தப் படம் உலக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி 1100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
ராம்சரண், ஜூனியர் என்டிஆர் என இரு நாயகர்கள் தோன்றியிருந்த இந்த படம் தேசிய போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இது சுமார் 550 கோடிகளில் தயாரான படமாகும். உலக பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டி இருந்த ஆர் ஆர் ஆர் பல மாதங்கள் கழித்து தற்போது ஜப்பானின் திரைப்படப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகளுக்கு...அடேங்கப்பா மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்...முதல் நாளே மாஸ் வசூல் தான்
நேற்று இந்த படம் ஜப்பானில் திரையிடப்பட்டுள்ளது. இதற்காக ஆர் ஆர் ஆர் டீம் ஜப்பானிற்கு புறப்பட்டுள்ளது. அங்கு கையில் ரோஜாவுடன் அவர்கள் சூப்பர் வாக் செய்யும் வீடியோவை நாயகன் ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.