'ஜெயிலர்' படத்தில் தீ குரலில்... ஆக்ரோஷமான வரிகளோடு வெளியான ஜுஜுபி சிங்கிள் பாடல் ! வீடியோ

Jul 26, 2023, 7:32 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. அண்ணாத்த படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள இந்த படத்தை, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் இப்படம் உருவாகி உள்ள நிலையில், இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான காவாலா லிரிக்கல் பாடல் மற்றும் ஹுக்கும் லிரிக்கல் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது தொடர்ந்து, தற்போது மூன்றாவது சிங்கிள் பாடலான ஜுஜுபி பாடல் ஆக்ரோஷமான வரிகளோடு வெளியாகியுள்ளது.

'களவாணி கண்ணையா... காளைக்கே கொம்ப சீவிப்புட்ட... அது முட்டி கிழுச்சி வீசாமதான் விடுமா உன்னையே!! களவாணி கண்ணையா பாவத்தை கணக்கா ஏத்திப்புட்டு... அது கூட்டி கழிச்சி தீர்க்காமத்தான் விடுமா உன்னைய!! என இந்த பாடல் துவங்கி உள்ளது. அனிரூத் இசையமைத்துள்ள இந்த பாடலை, ரௌடி பேபி தீ பாடியுள்ளார்.