நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், 2002 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன 'பாபா' திரைப்படம் புதிய பொலிவில், ரீ - ரீலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தின் புதிய ட்ரெய்லரை நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, பிளாக்பஸ்டர் ஹிட் படங்களான 'அண்ணாமலை', 'பாட்ஷா' ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா மூன்றாவது முறையாக ரஜினிகாந்தை வைத்து இயக்கி இருந்த  திரைப்படம் பாபா. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்தது மட்டுமின்றி, தயாரித்து, கதை மற்றும் திரை கதையும் எழுதி இருந்தார்.

இப்படம் ரஜினியின் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் என்றாலும், இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன்..  தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது புது பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி விரைவில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை தற்போது ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே வெளியான இந்த படத்தை தற்போது டிஜிட்டல் மயமாக்கி அதில் உள்ள சில காட்சிகள் மெருகேற்றி புது பொலிவுடன் ரீ- ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் கூட இதற்காக நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் பேசிய சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக, மனிஷா கொய்ராலா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் கவுண்டமணி தன்னுடைய டைமிங் காமெடியில் ரசிகர்கள் மனதை கவர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது.

03:36அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
03:29கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி
02:31நடிகர் ரோபோ சங்கர் மறைவு.....அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் மற்றும் திரைபிரபலங்கள் !
Read more