எனக்கு கிடைச்சது இந்த ஒரே லைப்... எனக்கு பிடிச்ச மாதிரி வாழனும்! விறுவிறுப்பான 'ரேசர்' பட ட்ரைலர்!

Mar 26, 2023, 9:04 PM IST

நடிகர் அகில் சந்தோஷ் கதாநாயகனாகவும், பாண்டியன் ஸ்டார் முல்லை லாவண்யா ஹீரோயினாகவும் நடித்துள்ள திரைப்படம் 'ரேசர்' இந்த படத்தை, ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்திருக்கிறார். இப்படத்தை சதீஷ் இயக்குகிறார். சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி இணை தயாரிப்பு செய்திருக்கிறார். பிரபாகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பரத் இசை அமைத்திருக்கிறார்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர்... ரேஸராக ஆசைப்பட்டு எடுக்கும் ரிஸ்குகள் தான் இந்த படம். இப்படத்துக்காக பாண்டிச்சேரியில் பெரும் பொருட் செலவில் பைக் ரேஸ் நடக்கும் பந்தய மைதானம் அமைக்கப்பட்டது. இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.