Annapoorani: பிடிச்சத பண்ணுனா.. லட்சம் பேருமே சூப்பர் ஸ்டார் தான்! வெளியானது நயன்தாராவின் 'அன்னபூரணி' ட்ரைலர்!

Published : Nov 27, 2023, 08:15 PM IST

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள, 'அன்னபூரணி' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அன்னபூரணி- The Goddess of Food’ .  நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தை,  ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.  இந்தப் படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் சற்று முன்னர் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு.

பிராமண குடும்பத்தில் பிறந்து, சமையல் கலைஞராக விரும்பும் நயன்தாரா... தனக்கான தடைகளை தாண்டி, ஒரு செஃபாக தன்னுடைய கனவை எட்டி பிடிக்கிறாரா? இல்லையா என்பதே இந்த படத்தின் கதைக்களம். இப்படம் நயன்தாராவின் 75-ஆவது படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஜா ராணி படத்திற்கு பின்னர் நடிகர் ஜெய், நயன்தாராவுடன் நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் எஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?