பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Published : Feb 05, 2023, 01:34 PM IST

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராமின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராமின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியபோது அமைச்சர் மா.சுப்ரமணியனும் உடன் இருந்தார்.

இதையடுத்து பாடகி வாணி ஜெயராமின் உடலை காவல்துறை மரியாதை உடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று டிஜிபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பாடகி வாணி ஜெயராம் நேற்று தனது இல்லத்தில் இறந்த நிலையில் கிடந்தார். தலையில் காயத்துடன் அவர் இறந்து கிடந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதி, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

இறுதியில் அவர் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதையடுத்து அவரது மரணத்தில் சந்தேகமில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். 

02:39Vijay - Trisha | சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?
01:5226-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!
02:48'பிகில்' படத்துல 6 மாசம் நடிச்சும்... சம்பளம் இவ்ளோதானா? உண்மையை உடைத்த இந்திரஜா!
02:19எலெக்ஷனுக்கு ஆப்சென்ட் ஆன தளபதியின் தம்பிகள்... லோகி, நெல்சன் ஓட்டு போடாதது ஏன்?
02:1715 years gap between Vijay and Trisha | 15 ஆண்டுகள் திரிஷா பக்கம் தலைகாட்டாத விஜய்... காரணம் என்ன?
01:00காதலுக்கு மரியாதை மாஸ் ஹிட் பாடல் பிறந்த கதை.! இளையராஜா செதுக்கிய இசையமுது.! என்ன சிறப்பு தெரியுமா?
01:45குழந்தைக்கு தாயான சீரியல் நடிகை.! ஸ்வீட் எடுத்து கொண்டாடிய விஜே ஆதவன்.! அம்பலமானதா ரகசிய வாழ்க்கை?
03:10Music | என்னை தாலாட்ட வருவாளா?! இளையராஜா செதுக்கிய காதல் ராகம்.! எப்படி ஸ்பெஷல் தெரியுமா?
02:35மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?!
02:45பாட்ஷா படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலை ரிஜெக்ட் செய்த ரஜினி - அப்செட் ஆன தேவா!
Read more