'லியோ' படத்தில் இடம்பெற்றுள்ள லைட்டில் பாடலான Ordinary Person என துவங்கும்... மாஸ் பாடலை ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியிட்டு ரசிகர்கள் மனதை குளிர வைத்துள்ளது படக்குழு.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது 'லியோ'. மேலும் ஜெயிலர் படத்தின் வசூலையே பின்னுக்கு தள்ளும் அளவிற்க்கு, 4 நாட்களில் சுமார் 400 கோடி வசூலை வாரி குவித்துள்ளது. இந்த தகவல் படக்குழுவினரை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஆயுத பூஜை ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
லியோ படத்தில் அனிரூத் இசையில், ஜோனிதா காந்தியின் காந்த குரலில் இடம்பெற்ற டைட்டில் பாடலான Ordinary Person என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ சற்று முன்னர் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே தளபதியின் இந்த பாடல், படு ட்ரெண்டிக்காக யூடியூபில் பார்த்து ரசிக்கப்பட்டு வருவதோடு, லைக்குகளையும் குவித்து வருகிறது.