ஆனந்த் அம்பானியின் திருமண விழா மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கியூட்டாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் நடைபெறுகிறது. திருமண விழா 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள், விளையாட்டு, சினிமா பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற விழாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் விழாவில் பங்கேற்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.