Oct 14, 2022, 8:29 PM IST
தொடர்ந்து வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து நடித்து வரும் கார்த்தி. தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், நடித்துள்ள திரைப்படம் 'சர்தார்'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவிய நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது வெளியாகியுள்ள ட்ரைலர் அமைந்துள்ளது.
போலீஸ் அதிகாரியான கார்த்தி, ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்கிறார். அந்த வகையில் இன்டர்நேஷனல் ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்க இவர், தொலைந்து போன ராணுவ ரகசியங்களை திருடியது யார் ? இதனை கண்டு பிடிக்க போகும் போது அவர் சந்திக்கும் பிரச்சனைகள், பற்றி மிகவும் விறுவிறுப்பாகவும், காதல்... கல்யாணம் என கிளுகிளுப்பாகவும் எடுப்பட்டுள்ள படம் தான் 'சர்தார்'. தற்போது வெளியாகியுள்ள ட்ரைலர் இதோ...