தீவிர சிவபக்தரான கண்ணாவின் கதையை அடிப்படியாக கொண்டு உருவாகியுள்ள காவிய படமான, 'கண்ணப்பா' படத்தின் இரண்டாவது டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
கண்ணப்பாவின் புகழ்பெற்ற கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு காவிய திரைப்படமான ‘கண்ணப்பா’ உருவாகி உள்ளது. முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை, இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கி உள்ளார்.மோகன் பாபு இந்த படத்தை தயாரித்துள்ளார்.
ஆன்மீகம் மற்றும் வீரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த நிலையில், இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக, மோகன் லால், அக்ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், சரத்குமார், மோகன் பாபு, மது பாலா, ஆகியோர்.
தற்போது இந்த படத்தின், இரண்டாவது டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.