Ganesh A | Updated: Nov 7, 2024, 11:29 AM IST
கமல்ஹாசன், இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் அப்டேட்டும் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.