குடும்பங்கள் கொண்டாடப்போகும் வெற்றி; பல எமோஷன்ஸ் கலந்த ஜெயம் ரவியின் Brother - ட்ரைலர் இதோ!

Ansgar R |  
Published : Oct 28, 2024, 11:15 PM IST

Brother Trailer : வருகின்ற தீபாவளி திருநாளுக்கு ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகச் சிறந்த நடிகராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து வருபவர் தான் ஜெயம் ரவி. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்ய எப்போதுமே அவர் தயங்கியதில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு நேர்த்தியான தனது நடிப்பால் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பெற்று வருகிறார். 

இந்த சூழலில் தான் அவர் தனது மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து முடிவு குறித்து வெளியிட்டார். அது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், தன்னுடைய திரை வாழ்க்கையை மனதில் வைத்தே இந்த முடிவை தான் எடுத்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்த சூழலில் ஏற்கனவே அவருடைய நடிப்பில் "சைரன்" என்கின்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளியான நிலையில், தற்போது தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். 

அதில் இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், கலாநிதி மாறன் தயாரிப்பில் "பிரதர்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார். வருகின்ற தீபாவளி திருநாளன்று அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன்,  VTV கணேஷ், ராவு ரமேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது அப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

01:00காதலுக்கு மரியாதை மாஸ் ஹிட் பாடல் பிறந்த கதை.! இளையராஜா செதுக்கிய இசையமுது.! என்ன சிறப்பு தெரியுமா?
01:45குழந்தைக்கு தாயான சீரியல் நடிகை.! ஸ்வீட் எடுத்து கொண்டாடிய விஜே ஆதவன்.! அம்பலமானதா ரகசிய வாழ்க்கை?
03:10Music | என்னை தாலாட்ட வருவாளா?! இளையராஜா செதுக்கிய காதல் ராகம்.! எப்படி ஸ்பெஷல் தெரியுமா?
02:35மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?!
02:45பாட்ஷா படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலை ரிஜெக்ட் செய்த ரஜினி - அப்செட் ஆன தேவா!
02:25Songs | வாலி செய்த வார்த்தை விளையாட்டு..! வாயை மூடாமல் பாடிய மலேசியா வாசுதேவன்..! என்ன பாட்டு ?
02:26SPB செய்த மிஸ்டேக்.. ஒரே பாட்டில் ஸ்டாராகிய மலேசியா வாசுதேவன்...இந்த பாட்டுக்கு பின்னனி ?
02:215 நிமிடத்தில் உருவான மாஸ் ஹிட்டு.! விஜய் - சிம்ரன் மேஜிக்கை மெய் மறந்து ரசித்த ரசிகர்கள்.!
02:11எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் பிரச்சினையே இல்லாமல் பிரிந்தது வேதனை.! ஃபீலிங்ஸை கொட்டிய விக்னேஷ் சிவன்.!
02:33"பச்சமல பூவு" பாடிய பிறகு எஸ்.பி.பி. செய்த செயல்.! மாயம் செய்த இளையராஜாவை உச்சி முகர்ந்த பாடு நிலா.!
Read more