Oct 12, 2022, 8:33 PM IST
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஜான்வி கபூர், பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தாலும், கதைகளை மிகவும் தெளிவாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி இவர் கவனமாக தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் வெற்றி படங்கள் லிஸ்டில் இடம் பிடித்துவிடுகிறது.
தற்போது இவர், முதல் நுரையாக தன்னுடைய தந்தையின் தயாரிப்பில் நடித்துள்ள த்ரில்லர் படமான ‘மிலி’ படத்தின் டீசரை ஜீ ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. குளிர்ந்த அறைக்குள் மாட்டிக்கொள்ளும் ஜான்வி, அதில் இருந்து உயிர் பிழைக்க போராடும் காட்சிகள் வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. 'மிலி படத்தை தேசிய விருது பெற்ற மதுகுட்டி சேவியர் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.