இங்க பேயும் நிஜம் சாவும் நிஜம்; ரிலீஸ் தேதியுடன் வெளியானது ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'கிங்ஸ்டன்' டீசர்!

Jan 9, 2025, 8:21 PM IST

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி. வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள, கடலில் நடக்கும் முதல் அட்வென்ச்சர் திரைப்படமான, 'கிங்ஸ்டன் ' திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.‌ 2025 மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் நடக்கும் அமானுஷ்யத்தை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிங்ஸ்டன் ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் திவ்யா பாரதி ஹீரோயினாக நடித்துள்ளார்.