வாழ்க ஒரு வாய்ப்பு கொடுத்துச்சு... அதை விட்டுட கூடாதுனு முடிவு பண்ணுனேன்! ஜிவி நடித்துள்ள 'கள்வன்' ட்ரைலர் இதோ

Feb 28, 2024, 9:37 PM IST

ஜிவி பிரகாஷ், இசை மற்றும் என இரண்டிற்கும் சம அளவிலான முக்கியத்துவம் கொடுத்து வருவதோடு மட்டும் இன்றி, இரண்டிலுமே வெற்றியாளராக திகழ்ந்து வருகிறார். தொடர்ந்து ஒரே மாதிரியான கதைக்களத்தில் நடிக்காமல், வித்யாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வரும் இவர், தற்போது அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கள்வன்'.

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக, நாச்சியார் படத்தை தொடர்ந்து மீண்டும் இவனா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா, KPY தீனா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பாக்காப்படுகிறது.