Oct 14, 2022, 1:57 PM IST
பிக்பாஸ் வீட்டில் 12 போட்டியாளர்கள் உள்ளே வந்தாலே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இந்த முறை மொத்தம் 20 போட்டியாளர்களை உள்ளே இறக்கி உள்ளனர் பிக்பாஸ் குழுவினர். நேற்றைய தினமே மகேஸ்வரி சில வாக்கு வாதங்களை துவங்கி, சண்டைகளை துவங்கி வைத்தார். இதை தொடர்ந்து ஜனனி கூறிய கருத்து தான் மிகப்பெரிய விவாதமாக பிக்பாஸ் வீட்டில் மாறியுள்ளது.
தனலட்சுமி மற்றும் ஜிபி முத்து இடையே பிரச்சனை வந்த போது... தனலட்சுமி ஜிபி முத்து நடிக்கிறார் என கூறினார். இதனால் ஜிபி முத்து அழுதது பார்வையாளர்களையே கலங்க வைத்து விட்டது. உண்மையில் தனலட்சுமி தான் ஒரு வித கோபத்துடன் அவரை தாக்கி பேசியது தெரிந்தது. இதனால் ஜிபி முத்துவின் ஆர்மியை சேர்ந்தவர்கள் தனலக்ஷ்மிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
சற்றுமுன் வெளியான புரோமோவில், ஜிபி முத்துவுக்கு ஆதரவாக பேசிய ஜனனியை டார்கெட் செய்யும் தனலட்சுமி ஏன் அவர் ரீல்ஸ் என்கிற வார்த்தையை பயன்படுத்தினர் என கோபப்படுகிறார். மேலும் இதை பற்றிய விவாதம் ஒரு புறம் வீட்டிற்குள் சென்று கொண்டிருக்க, ஜிபி முத்து எதையும் கண்டு கொள்ளாமல்... வானத்தை பார்த்து மல்லாக்க படுத்து விட்டதை பாக்குறது சுகமே தனி என்று வடிவேலு சார் சொன்னது தப்பா போகல என பேசுகிறார். இந்த புரோமோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.