vuukle one pixel image

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வழக்கு விசாரணை.. இயக்குனர் பா ரஞ்சித் சார்பில் நடக்கும் பேரணி! வீடியோ

manimegalai a  | Published: Jul 17, 2024, 4:53 PM IST

இந்த வீடியோவில் இயக்குனர் பா ரஞ்சித் பேசியுள்ளதாவது, "ஜெய் பீம், வருகிற 20-ம் தேதி மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு நியாமான முரையில் நடத்தப்பட வேண்டும் என்றும், அவரின் கொலைக்கு நீதி வேண்டியும் ஒரு பேரணி நடைபெற உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணி 20-ம் தேதி மாலை 3 மணி அளவில் ரமடா ஹோட்டல் எதிரில் இருந்து புறப்பட்டு, ராஜரத்தினம் அரங்கில் முடிவடைய உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் தலித் மக்களின் உரிமைக்காகவும், அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு குரல் கொடுக்கும் பல தலித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.