Sep 25, 2022, 3:23 PM IST
ராக்கி, சாணிக்காயிதம் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் மூன்றாவதாக இயக்க உள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டாக்டர், டான் படங்களில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக உள்ள இப்படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை தொகுத்து கிளிம்ப்ஸ் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.