12 ஆண்டுகளுக்குப் பின், வெளியாக உள்ள 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகத்தின், ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
யூகிக்க முடியாத சிறந்த கதையம்சமுள்ள, படங்கள் எத்தனையோ உலக சினிமா வரலாற்றில் வெளியாகி இருந்தாலும், சில படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்கின்றன. அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'அவதார்' படம் தற்போது வரை அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டு வரும் திரைப்படமாகும், இந்த படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருந்தார்.
வழக்கமான கதைகளை போல் இல்லாமல், மிகவும் தனித்துவமான மனிதர்களை காட்டும் விதத்தில் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும். முதல் பாகத்தில் காடு சார்ந்த இடங்களை வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகளும் துரிதமாக நடந்து வந்தது.
இந்நிலையில் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசத்துடன் உருவாக்கி உள்ள 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின், வரும் டிசம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கடலுக்கு அடியில் உள்ள அவதாரின் உலகத்தை ஜேம்ஸ் கேமரூன் மிக அழகாக காட்டியுள்ளார். இந்த டார்லரை பார்க்கும் போதே... படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.