மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள தக் லைஃப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.
Thug Life First Single JinguChaa Song : நாயகன் படத்துக்கு பின் கமல்ஹாசனும், மணிரத்னமும் மீண்டும் இணைந்துள்ள படம் தக் லைஃப். இப்படத்தில் சிம்பு, திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலாக, கமல்ஹாசன் எழுதிய ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.
ஜிங்குச்சா பாடலை வைஷாலி, ஷக்திஸ்ரீ கோபாலன், ஆதித்யா ஆர்.கே ஆகியோர் பாடி இருக்கிறார்கள். தக் லைஃப் திரைப்படத்தில் கமலின் மகனாக சிம்பு நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 5ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பாடலை ரிலீஸ் செய்தனர்.