அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் வழங்க, கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரித்துள்ள பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அஞ்சலி சிவராமன் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், டி ஜே அருணாச்சலம், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
டீன் ஏஜ் வயதில் பெண்களுக்கு ஏற்படும் உணர்வு ரீதியான பிரச்சனைகளை பெற்றோர் சரியாக கையாளாமல் போகும் பட்சத்தில், பெண் பிள்ளைகள் எப்படிப்பட்ட தடுமாற்றத்தை உணர்கின்றனர் என்பதே இந்த படத்தின் கதைக்களம் என்பது டீசர் மூலம் தெரிகிறது. இதுவரை வெளிவராத வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த படம் உருவாகி உள்ளது. தற்போது வெளியாகி உள்ள டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.