சொதப்பிய செல்போன்... வசமாக சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் பரபரப்பு காட்சிகளுடன் வெளியான 'டிரைவர் ஜமுனா' ஸ்னீக் பீக்!

Published : Dec 28, 2022, 10:38 PM IST

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜமுனா ட்ரைவர்' படத்தில் இருந்து இரண்டாவது ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
 

தமிழ் சினிமாவில், பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து, சத்தமில்லாமல் வளர்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில், டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'ட்ரைவர் ஜமுனா'. இந்த படத்தில் ஒரு கார் ட்ரைவர் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். 

இந்த படத்திற்காக அதிவேகமாக கார் ஓட்டியுள்ளது மட்டும் இன்றி டூப் போடாமல் சில சண்டை காட்சிகளிலும் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். பரபரப்பான காட்சிகளுடன் இந்த படத்தை இயக்குனர் கிங்சிலி என்பவர் எழுதி இயக்கியுள்ளார். ஜிப்ரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு... கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை எஸ்.பி சவுத்ரி தயாரித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில்  ஆடுகளம் நரேன், மணிகண்டன் ராஜேஷ், கவிதா பாரதி, ஸ்டான்ட் அப் காமெடியன் அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான ஸ்னீக் பீக் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது இரண்டாவது ஸ்னீக் பபீக் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. 

03:29எம்ஜிஆர் அழைத்தும் நம்பியார் ஏன் அரசியலை தவிர்த்தார் தெரியுமா? மந்திரி பதவியை மறுத்த மாமனிதர்!
01:43பின்னணி பாடகி டூ பிசினஸ் மேக்னட்: ஆஷா போஸ்லேவின் 250 கோடி சொத்து யாருக்கு?!
01:39விஜய் தேவரகொண்டா பேசிய அந்த வார்த்தை! கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்ட ராஷ்மிகா ! என்ன நடந்தது ?
03:27Asha bhosle | ஆஷா போஸ்லே பாடிய தமிழ் ஹிட்ஸ்.! காலத்தை கடந்த மனதை மயக்கும் மெலடிகள்.!
02:10தனிக்குரலின் தேவதை Asha Bhosle.! நினைவில் நெகிழ்ந்த Ilaiyaraaja, கண்ணீருடன் பேசிய இளையராஜா.!
02:19பாடி முடித்தபோது கதறி அழுத ஆஷா போஷ்லே..? - செந்தூரப் பூவே பாடல் உருவான உணர்ச்சிப்பூர்வமான வரலாறு !
03:45மொத்த படமும் அவுட் | ஜனநாயகன்-ஐ லீக் பண்ணியது யார்? கடும் அப்செட்டில் விஜய்..!
03:11Vijayakanth | கேப்டன் பட்டத்துக்கே வழக்கு! விஜயகாந் சந்தித்த சட்டப் போராட்டங்கள்.!
03:08ஜனநாயகன் முடக்கப்பட்டது பற்றிய கேள்வி... ரஜினிகாந்த் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு..!
03:43மறக்க முடியுமா இந்த மதுர குரலை?! காந்த குரலோன் மலேசியா வாசுதேவனின் டாப் 10 ஹிட்ஸ்.!