Oct 9, 2022, 8:35 PM IST
பிக்பாஸ் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது ஆரம்பமாகியுள்ள பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை, சுமார் 21 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி வருகிறது.
அந்த வகையில் முதல் போட்டியாளராக ஜி.பி.முத்து முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்த போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். தற்போது பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும், சீரியல் நடிகருமான மணிகண்டன் உள்ளே சென்றுள்ளார். வாழ்க்கையில் பல ரிஜெக்ஷன்களை சந்தித்துள்ளதாகவும், எத்தனை தடை வந்தாலும் அதை கடந்து போக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய முதல் எதிரி, தன்னுடைய ஐடென்டிட்டிதான். பலர் தன்னை சீரியல் பெயர்களை வைத்து தான் அழைப்பார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் மணிகண்டன் யார் என்பதை பார்ப்பீர்கள் என கூறியுள்ளார். அந்த புரோமோ இதோ...