Oct 23, 2022, 3:40 PM IST
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் . இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தன்மீது மிகுந்த அன்பை வைத்துள்ள ரசிகர்களுக்காக அவர் பிரம்மாண்ட விருந்து கொடுத்து அசத்தி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடிய கீர்த்தி சுரேஷ். அப்போது அவர்களுடன் சேர்ந்து உணவருந்தியதோடு, புகைப்படங்கள் எடுத்தும், கேக் வெட்டியும் மகிழ்ந்தார். அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
நடிகர்கள் பலர் ரசிகர்களை சந்தித்து பேசுவதை பற்றி தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நடிகை ஒருவர் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு விருந்து கொடுத்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர். கீர்த்தி நடிப்பில் தற்போது தமிழில் சைரன், மாமன்னன் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... 2-வது மனைவியையும் விவாகரத்து செய்தார் பாலா... ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை