Oct 28, 2023, 7:54 PM IST
நடிகர் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வந்த 'தங்கலான்' படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது விக்ரம் நடிக்க உள்ள 62-ஆவது படம் குறித்த அறிவிப்பை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தை இயக்குனர் AU அருண்குமார் இயக்கும் நிலையில், ரியா ஷிபு தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற பிரபலங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்ப்படுகிறது.
இந்த படத்தில், விக்ரம் பார்ப்பதற்கு தாடி இல்லாத வணங்கான் பட சூர்யா போல் உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அதே போல் இப்படத்தில் விக்ரம் யாருக்கும் பயப்புடாமல்... போலீஸ் ஸ்டேஷன் உள்ளேயே புகுந்து ஒருவரை அடித்து வெளுக்கிறார். மளிகை கடை நடத்தும் இவர் யாரும் பயப்படலானாலும் மகள் மீது அம்புட்டு பயம் என்பதையும் இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.