சேலத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ரசிகர்களுக்கு நடிகர் சூரி அட்வைஸ் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி கதை மற்றும் நடிப்பில், மாமன் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து சூரி திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்.இன்று சேலம் ராஸ் திரையரங்கத்தில் ரசிகர்களை சந்தித்து பேசினார். தியேட்டருக்கு படம் பார்க்க வந்திருந்த பெண்கள் மற்றும் ரசிகர்களிடம் படம் எப்படி இருக்கிறது என நேரடியாகவே கேட்டு தெரிந்து கொண்டதோடு ரசிகர்களுடன் குழு புகைப்படமும் செல்பியும் எடுத்துக் கொண்டார்