Actor Jagadish : மாறுபட்ட கதைக்களம்.. அதகளம் செய்யவரும் JD & குரு சோமசுந்தரம்.. பயமறியா பிரம்மை - ட்ரைலர் இதோ!

Jun 13, 2024, 8:59 PM IST

கூத்துப்பட்டறையில் குரு சோமசுந்தரம் அவர்களின் நடிப்பை பார்த்து வியந்த பிரபல இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, கடந்த 2011 ஆம் ஆண்டு தனது இயக்கத்தில் வெளியான "ஆரண்ய காண்டம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிகர் குரு சோமசுந்தரத்தை தமிழ் திரை உலகில் அறிமுகம் செய்தார். 

அதன்பிறகு தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ச்சியாக நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார் குரு சோமசுந்தரம். இறுதியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "பெல்" என்கின்ற திரைப்படத்தில் அவர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். 

தற்பொழுது பெரிய அளவில் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அவர் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெகதீஷ் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிக்கும் "பயமறியா பிரம்மை" என்கின்ற திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை ராகுல் கபாலி இயக்கியுள்ள நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு பட குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.