லைவ் வீடியோவில் அதிரடியாக பேசிய பரவை முனியம்மா.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் அபி சரவணன்..!

லைவ் வீடியோவில் அதிரடியாக பேசிய பரவை முனியம்மா.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் அபி சரவணன்..!

Published : Nov 01, 2019, 04:39 PM ISTUpdated : Nov 01, 2019, 05:16 PM IST

இப்படித்தான் இருக்கிறார் 'பரவை' முனியம்மா.. பக்கத்தில் இருந்து காட்டிய நடிகர் அபி சரவணன் வீடியோ..!

உடல்நலக்குறைவால் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் நாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா சிகிச்சை பெற்று நலம் பெற்று வரும் நிலையில், அவர் இயற்கை எய்தியதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.

நடிகை பரவை முனியம்மாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏசியாநெட் மதுரை, சிறப்பு செய்தியாளர்,  ‘பரவை முனியம்மாள் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்’என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். 

 மதுரையை சேர்ந்த நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா, தூள் முதல் மான் கராத்தே வரை பல படங்களிலும் நடித்து பிரபலமானார். 83 வயதான அவர் கிட்னி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். கலைமாமணி விருது பெற்ற இவருக்கு, அரசின் உதவி தொகையாக மாதம் 6,000 ரூபாய் கிடைக்கிறது. இத்தொகை, மருத்துவ சிகிச்சைக்கே போதாத நிலையில், மிகவும்
சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பிறகும் அவரால் பேச முடியவில்லை. காதும் கேட்கவில்லை. நேற்று மதியம் ‘பரவை’முனியம்மா, மூச்சுவிட சிரமப்பட்டார்.

இதை அறிந்து நடிகர் அபி சரவணன், அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்த்துள்ளார். பரவை முனியம்மாவின் உடல்நலம் குறித்து அபி சரவணனிடம் நடிகர் சங்கத்தில் இருந்து கார்த்தி, நாசர், பொன்வண்ணன், ஐசரி கணேஷ் மற்றும் பாக்யராஜ் ஆகியோர் விசாரித்தனர். அவருக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

 இதனை தொடர்ந்து நடிகை பரவை முனியம்மாவுக்கு திடீரென இறந்து விட்டதாக வரும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இது தவறான தகவல் என்றும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும்   நேரடிக்காக மருத்துமனைக்கு  சென்று ‘பரவை’முனியம்மா பக்கத்தில் அமர்ந்து பேசி நடிகர் அபி சரவணன்   வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

07:16லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
03:36அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
03:29கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி