போடுறா வெடிய... மெர்சலான காட்சிகளுடன் வெளிவந்த ‘காந்தாரா சாப்டர் 1’ டிரெய்லர்

Published : Sep 22, 2025, 01:02 PM IST
Kantara Chapter 1

சுருக்கம்

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் பிரம்மிப்பூட்டும் டிரெய்லரை தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

Kantara Chapter 1 Trailer Release : இந்திய சினிமாவிற்கு உலகளவில் பெருமை சேர்த்த படம் காந்தாரா. மிகக் குறைந்த பட்ஜெட்டில் வெளியான காந்தாராவின் முதல் பாகம் அமோக வரவேற்பைப் பெற்றது. பின்னர், இப்படத்தின் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், ஆங்கிலம் மற்றும் துளு பதிப்புகளை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர், அவை அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட வசூலை ஈட்டின. இந்தக் காரணங்களால், சினிமா ரசிகர்கள் காந்தாராவின் இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.காந்தாராவின் முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில், அதன் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர் 2 அன்று கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என தயாரிப்பாளர்களான ஹொம்பாளே பிலிம்ஸ் அறிவித்திருந்தது. 2022-ல் வெளியான காந்தாராவின் Prequel ஆக இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது. முன்னதாக வெளியிடப்பட்ட இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு போஸ்டரும் டீசரும் டிரெண்டிங்காகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர் ரிலீஸ்

ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கும் காந்தாரா சாப்டர் 1-ஐ விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார். இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் இன்று ரிலீஸ் செய்துள்ளனர். அதன்படி செப்டம்பர் 22 அன்று மதியம் 12.45க்கு டிரெய்லர் வெளியிடப்பட்டது. இப்படத்தின் தமிழ் டிரெய்லரை சிவகார்த்திகேயனும், மலையாள டிரெய்லரை பிருத்விராஜும், இந்தியில் பாலிவுட் இளவரசன் ஹிருத்திக் ரோஷனும், தெலுங்கில் பாகுபலி பிரபாஸும், வெளியிட்டனர்.

இந்த டிரெய்லரில் ரிஷப் ஷெட்டியின் மகன், அப்பா இந்த இடத்தில் எதற்காக மாயமானார் என்பதை கண்டுபிடிக்க வருவது போல் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதன்மூலம் காந்தாராவின் வரலாற்றை பேசும் படமாக இது இருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது. மேலும் இதில் பிரம்மிக்க வைக்கும் அரசவைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பிரம்மிப்பூட்டும் சண்டைக் காட்சிகள், மிரள வைக்கும் வி.எஃப்.எக்ஸ், சவுண்ட் எஃபெக்ட்ஸ் என டிரெய்லரிலேயே மாஸ் காட்டி இருக்கிறது இந்த காந்தாரா சாப்டர் 1. இந்த டிரெய்லரை பார்த்த ரசிகர்கள், இப்படம் கன்ஃபார்ம் 1000 கோடி வசூலை அள்ளும் என கூறி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழ் படத்தின் காப்பியா? ரசிகர்களை கன்பியூஸ் ஆக்கிய தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரெய்லர்
ஊதித் தள்ள நான் ஒன்னும் மண் இல்ல... மலை..! கவனம் ஈர்க்கும் காந்தா டிரெய்லர் இதோ