
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் கௌதமின் நண்பர்களை விசாரித்து உண்மையை வர வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வைஜெயந்தி அடுத்து நீ துரையை தான் விசாரிக்கணும்.. ஆனால் அவனை நான் வெளியே விட மாட்டேன். ஜெயிலில் வைத்து கொன்னுடுவேன். அவன் தங்கச்சி மாலதியை கொன்னதும் நான் தான் என்று சொல்ல மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் துரை இது அனைத்தையும் கேட்டு அதிர்ச்சி அடைகிறான்.
தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லால்; எமோஷனலான மோகன்லால் மனைவி!
அடுத்து கோர்ட் மீண்டும் கூடுகிறது, சண்முகம் அடுத்ததாக துரையை விசாரிக்க வேண்டும் என்று சொல்ல ஜெயிலில் இருப்பவனை எப்படி விசாரிக்க முடியும் என்று கேள்வி கேட்கிறார் சிவனாண்டி. ஆனால் சண்முகம் அதற்கான முறையான அனுமதி வாங்கி இருப்பதாக சொல்லி துரையை அழைத்து கூண்டில் ஏற்றுகிறான். தொடர்ந்து துரையை விசாரிக்க அவன் கௌதம் ஒரு கொலையை செய்ததும் அதற்கான பழியை நான் ஏற்று கொண்டேன், என் தங்கச்சிக்கு டீச்சர் வேலை வாங்கி கொடுத்து எனக்கு 20 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தாங்க என்ற உண்மைகளை உடைக்கிறான்.
உயிர் பிழைப்பாளா ரேவதி? பரமேஸ்வரி பாட்டி கொடுத்த வாக்கு - கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
கௌதம் செய்த குற்றத்திற்காக அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் நீதிமன்றம் தண்டனையை அறிவிக்க கௌதம் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.