என்ன இப்படி இறங்கிட்டாங்க..வயிற்றில் குழந்தையுடன் பாரதிக்காக விஷம் குடிக்கும் வெண்பா...திட்டி தீர்க்கும் பாரதி

Published : Oct 03, 2022, 01:28 PM ISTUpdated : Oct 03, 2022, 01:49 PM IST
என்ன இப்படி இறங்கிட்டாங்க..வயிற்றில் குழந்தையுடன் பாரதிக்காக விஷம் குடிக்கும் வெண்பா...திட்டி தீர்க்கும் பாரதி

சுருக்கம்

ஒரு வழியாக கண்விழிக்க அவளைக் கண்டபடி திட்டி தீர்த்து விடுகிறார் பாரதி. இன்னும் அடங்காத வெண்பா, உன்னால என்ன கல்யாணம் பண்ணிக்க முடியுமா? முடியாத? என மறுபடியும் கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

வீட்டிற்கு வரும் ஹேமா, அவரது அம்மா படம் என்று பாரதி கொடுத்த படத்திடம், இன்று பள்ளியில் நடந்த விஷயத்தையும், அகிலனிடம் இனிமேல் சண்டை போட மாட்டேன் என சத்தியம் செய்த விஷயத்தையும் கூறிக்கொண்டிருக்க அங்கு வரும் சௌந்தர்யா, ஹேமாவை கீழே அனுப்பிவிட்டு இந்த போட்டோ தனது அம்மா இல்லை என்று பிற்காலத்தில் ஹேமாவுக்கு தெரிய வந்தால் பாரதி தன்னிடம் பொய் கூறிவிட்டதாக  நினைக்க மாட்டாளா? என கூறுகிறார். அதற்கு அகிலன் அவன் செய்த தப்புக்கு அவன் அனுபவிக்க வேண்டியது தான் என கூறுகிறார். 

இந்தப் பக்கம் லட்சுமி, ஸ்கூலில் தனக்காக தனது தந்தை லெட்டர் எழுதி கொடுத்தது குறித்து தாயிடம் மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அப்பா நம்ம எல்லோரும் ஒண்ணா இருக்கணும்னு ஆசையா இருக்குமா? எனக் கூறுகிறார் லக்ஷ்மி. அதற்கு கண்ணம்மா நடக்காததை பற்றி எல்லாம் யோசிக்காதே, என்கிறார். கண்டிப்பாக ஒருநாள் நான் சொல்ற மாதிரி எல்லாமே நடக்கும் பாருமா என்கிறார் லட்சுமி. அப்பா பாசத்திற்காக ஏங்கும் மகளை பார்த்து கவலைப்படுகிறார் கண்ணம்மா.

மேலும் செய்திகளுக்கு...தேவசேனா முதல் நந்தினி வரை...இளவரசிகளான தென்னிந்திய நாயகிகள் யார் யார் தெரியுமா?

மறுபுறம், வெண்பாவின் ரூமுக்கு வரும் சாந்தி ,அங்கு வெண்பாவை காணாததோடு அவரின் மொபைல் போன் கீழே கிடப்பதை கண்டு, பாரதிக்கு போன் செய்கிறார். அப்போது பாரதி நடந்ததை எல்லாம் சாந்தியிடம் கூறுகிறார். இதை யாரிடமும் கூற வேண்டாம் எனவும் கூறுகிறார் வெண்பா. அந்த சமயத்தில் ரூமுக்கு வரும் ஷர்மிளா, வெண்பா எங்கே என கேட்கிறார். அதற்கு சாந்தி, வெண்பா தனது தோழியை பார்க்க சென்றுள்ளதாக பொய் கூறுகிறார். இருந்தும் ஷர்மிளாவிற்கு சந்தேகம் வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு...பொழச்சு போகட்டுமுனு தான் விடுறேன்... கோபிக்கு நோஸ் கட் கொடுத்த பாக்கியா

இந்த பக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வெண்பா, ஒரு வழியாக கண்விழிக்க அவளைக் கண்டபடி திட்டி தீர்த்து விடுகிறார் பாரதி. இன்னும் அடங்காத வெண்பா, உன்னால என்ன கல்யாணம் பண்ணிக்க முடியுமா? முடியாத? என மறுபடியும் கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ethirneechal Today Episode : ஆதி குணசேகரனுக்கு என்னாச்சு? கதறி அழுத கதிர்; கல்லுமாதிரி நின்ற ஜனனி
டாப் 10 TRP ரேஸில் அதிரடி மாற்றம்... சன் டிவி தொடர்களை தூக்கியடித்த விஜய் டிவி சீரியல்கள்