உயிரை பணையம் வைத்த கண்ணம்மா...உருகிப்போன பாரதி.. இன்றைய முழு எபிசோட் இதோ

Published : Sep 23, 2022, 04:39 PM ISTUpdated : Sep 23, 2022, 04:40 PM IST
உயிரை பணையம் வைத்த கண்ணம்மா...உருகிப்போன பாரதி.. இன்றைய முழு எபிசோட் இதோ

சுருக்கம்

பின்னர் கண்ணம்மா சமைத்த உணவை அவரே பரிமாற அமைதியாக சாப்பிடும் பாரதியின் பக்கத்தில் கண்ணம்மாவை அமர வைத்து பரிமாறுகிறார் சௌந்தர்யா.

ஒரு வழியாக பாரதி கண்ணம்மாவில் தீவிரவாதி சீக்வன்ஸ் முடிந்துவிட்டது. தீவிரவாதிகளால் பிடிபட்ட பாரதி உடல் முழுவதும் பாம் கட்டியிருந்தும் கூட பயப்படாத கண்ணம்மா அவரின் உயிரை காப்பாற்ற மிகவும் சிரமப்பட்டு இருந்தார். இதனால் அவர் மீது பாரதிக்கு சிறிது கருணை பிறந்துள்ளது. பாரதி வீட்டில் தான் கண்ணம்மா லக்ஷ்மி இருவரும் இருக்கின்றனர். லட்சுமியும் ஹேமாவும் ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதை பார்த்த சௌந்தர்யா சந்தோசப்பட..லட்சுமிக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என கண்ணம்மா கூறா.. ஹேமாவுக்கு நீதான் அம்மானு தெரிஞ்சா என்ன ஆவனே தெரியல. பாரதி தன்னிடம் பொய் கூறியதாக கூறிய வெறுத்து விடுவாள் என பயப்படுகிறார்.

மேலும் செய்திகளுக்கு...கோபியின் அம்மாவை நினைந்து பயப்படும் ராதிகாவின் குடும்பத்தார்...செழியனை எதிர்த்து நிற்கும் ஜெனி..

பின்னர் வீட்டில் சமைத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. நான் இன்று சமைக்கிறேன் என கண்ணம்மா தெரிவிக்கிறார். இதை பாரதியிடம் தெரிவிக்கிறார் சௌந்தர்யா. ஆனால் பாரதி எதுவும் பதில் கூறாமல் மௌனமாக இருக்க ஏன் கண்ணம்மா சமைக்க கூடாதான்னு சவுந்தர்யா வினாவுகிறார். இல்லை அவளே இப்பொழுது தான் தீவிரவாதிகளிடம் இருந்து சிக்கி தப்பி உள்ளாள். ஏன் அவளை சிரமப்படுத்த வேண்டும் என்றுதான் யோசித்தேன் என்கிறார். 

மேலும் செய்திகளுக்கு...அமைச்சரை தொடர்ந்து காமெடி நடிகர் போண்டா மணிக்கு உதவிக்கரம் நீட்டிய பார்த்திபன்..

பின்னர் கண்ணம்மா சமைத்த உணவை அவரே பரிமாற அமைதியாக சாப்பிடும் பாரதியின் பக்கத்தில் கண்ணம்மாவை அமர வைத்து பரிமாறுகிறார் சௌந்தர்யா. இதன் பின்னர் தனியாக இருக்கும் பாரதியிடம் சென்று கண்ணம்மா உன் மீது பாரதிக்கு மிகுந்த பாசம் உள்ளது. நான் சேர்ந்து வாழ கட்டாயப்படுத்த மாட்டேன் ஒரு முறை யோசித்து நல்ல முடிவு எடு  என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... அருந்ததியுடன் ஆக்‌ஷனில் இறங்கிய ஜனனி
Siragadikka Aasai : காதல் விவகாரத்தை போட்டுடைத்த சத்யா... ரேகாவின் தந்தை எடுத்த தடாலடி முடிவு